சங்கிலி தொடர்போல் நல்ல நிகழ்ச்சிகளை நடத்தும் டி.என்.டி.ஜே. அடிக்கடி மக்களிடம் கையேந்தாமல் வெளிநாட்டு நிதி உதவி பெற முயற்சி செய்தால் அதில் என்ன தவறு?

ஏ. மீரான் சேட், அம்பத்தூர்

பதில் வெளிநாட்டு நிதி வருவதால் பலவிதமான தீய விளைவுகள் ஏற்படும்.

1- மக்களுக்கும் ஜமாஅத்துக்கும் தொடர்பு இல்லாமல் போய்விடும்.

2- மக்களுக்குக் கணக்கு காட்ட மறுக்கும் நிலை ஏற்படும்.

3-கணக்கற்ற பொருளாதாரம் காரணமாக ஜமாஅத் ஆடம்பரமான ஜமாஅத்தாக மாறிவிடும்.

4- தாவா பணியை விட எப்படியெல்லாம் வெளிநாட்டினரை ஏமாற்றி பணம் சேர்க்கலாம் என்பதே குறிக்கோளாகப் போய்விடும்.

5-அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.

6-பண உதவி செய்யும் நிறுவனங்களின் கொள்கைக்கு எதிராக வாய் திறக்கக் கூடாது என்ற புதுப் பாலிசி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

 

இதை விட மக்களிடம் நிதி கேட்டு கிடைக்கும் நிதிக்கு ஏற்ப நிகழ்ச்சி நடத்தினால் போதுமானதல்லவா?
உணர்வு 15:52