கேள்வி: பிப்ரவரி 14 ஆம் தேதி இட ஒதுக்கீடு போராட்டம் அறிவித்ததிற்கு ஏதும் காரணம் உண்டா? ஏனெனில் அன்றைக்கு சங்பரிவார்களும் காதலர் தினத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்களே! இதனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏதும் பாதிப்புகள் வருமா?

- அதிரை கே.அலி அக்பர், ரியாத், சவூதி அரேபியா

பிப்ரவரி 14 அன்று பல தினங்கள் வருகின்றன. நீங்கள் சொல்வது போல் கேடுகெட்ட காதலர் தினமும் வருகின்றது. அதைக் கண்டித்து சில இயக்கங்கள் அப்போது களமிறங்கும்.

அதேபோல கோவை குண்டு வெடிப்பு தினமும் வருகிறது.

இதன் காரணமாக நமது போராட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது. எந்த ஒரு நாளையும் ஒரு இயக்கத்துக்குச் சொந்தமாக்க முடியாது.

டிசம்பர் 6 அன்று பாபர் மசூதிக்காக முஸ்லிம்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதே தினத்தில் தான் அம்பேத்கர் பிறந்த தினத்தை தலித் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள். இதனால் ஏதாவது அசம்பாவிதம் நடந்ததா?

இன்னும் சொல்லப் போனால் சில ஊர்களில் டிசம்பர் 6 வெற்றிநாள் என்று சங்பரிவாரம் வம்புக்கு இழுத்தும் கூட எந்த அசம்பாவிதமும் இல்லாமல் தான் பாபர் மசூதி போராட்டங்கள் நடந்துள்ளன.

அது போல் பிப்வரி 14 இடஒதுக்கீடு போராட்டமும் எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் நடக்கும். இன்ஷா அல்லாஹ்.

நொண்டிக் காரணம் கூறி காவல் துறை அனுமதி மறுத்தால் இன்னும் வீரியமாக தடையை மீறி போராட்டம் நடக்கும்.
உணர்வு 17:17