கேள்வி: ஒரு தனியார் மாத இதழில் வேலூர் பாகியாத் அரபி கல்லூரிக்கும் காஷிபுல் ஹூதா அரபிக் கல்லூரிக்கும் நடக்கும் பனிப்போரில் உங்களையும் இணைத்து கூறியுள்ளார்களே, உண்மை நிலவரம் என்ன?

- அஹ்மத் ஷமீம், கூத்தாநல்லூர்

தவ்ஹீத் ஜமாஅத்தையோ அல்லது என்னையோ யார் நன்றாக எதிர்க்கிறார்கள் என்ற போட்டி புதியது அல்ல. பல ஆண்டுகளாக நாம் பார்த்து வரக்கூடிய நிலை தான்.

பரேலவிக் கூட்டத்தின் பத்திரிகைகள், நாங்கள் தான் பீஜேயையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் எதிர்க்கிறோம், காஷிபுல் ஹுதா சரியாக எதிர்க்கவில்லை எனக் கூறுகிறது.

தேவ்பந்தி பத்திரிகையோ நாங்கள் தான் ஆரம்பம் முதல் பீஜேயையும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் சரியாக எதிர்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் எங்களை மிஞ்ச முடியாது என்று பெருமை அடிக்கிறது.

நம்மை எதிர்ப்பதில் போட்டி போடுவது தான் தங்களின் வளர்ச்சிக்கான வழி என்று இவர்கள் கணக்குப் போட்டால் இவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள் என்பது உறுதி.

நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் முன்னணி எனக் கூறிய பலர் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர்.

அந்த இடத்துக்குத் தான் அடுத்தடுத்து போட்டி நடக்கிறது. மக்கள் எல்லோரும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது போலவும் தவ்ஹீத் ஜமாஅத்தை நாம் எதிர்த்தால் அந்த பெரும்பான்மை மக்களை நாம் வசமாக்கிக் கொள்ளலாம் எனவும் இவர்கள் தப்புக் கணக்கு போடுகின்றனர்.

இதனால்தான் தொடர்ந்து  இவர்கள் ஏமாந்து வருகின்றனர்.

உண்மையில் சொல்லப்போனால் தவ்ஹீத் ஜமாஅத்திலும் பரேலவிசத்திலும் தேவ்பந்தியிசத்திலும் இன்னும் வேறு எதிலும் சேராதவர்கள் தான் மெஜாரிட்டியாக உள்ளனர். இவர்கள் சுன்னத் ஜமாஅத்தின் பின்னே போக மாட்டார்கள்.

அடுத்தபடியாக தவ்ஹீத் ஜமாஅத்துக்குத் தான் அதிக உறுப்பினர்களும் அதிக ஆதரவாளர்களும் உள்ளனர்.

தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரானவர்கள் தான் மைனாரிட்டியாக உள்ளனர்.

 எதிலும் சேராதவர்களை இவர்கள் தங்களின் ஆதரவாளர்களாக எண்ணிக் கொண்டு அவர்களை எப்படி தங்கள் பக்கம் வளைப்பது என்று போட்டி போடுகிறார்கள்.

பல மாநாடுகள் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவுத் தளத்தை நிரூபித்துள்ளது. மற்றவர்களோ ஆடையில் அழுக்குப்படாதவர்களை மட்டும் கூட்டி வைத்துக் கொண்டு பெரிய சக்தியாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

உணர்வு 16:16