தாழ்த்தப்பட்டவர் முஸ்லிமானால் அவரது வேலை போகுமா?
கேள்வி : தாழ்த்தப்பட்டவர் கோட்டாவில் அரசுப் பணி பெற்றவர் இஸ்லாத்தை ஏற்று தனது புதிய பெயரை கெஜட்டில் பதிவு செய்தால் அவரின் வேலைக்கு பாதிப்பு வருமா?
ரஹ்மத் பீவி
பதில் : தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக அரசுப் பணி பெற்றவர் மதம் மாறினாலும் அவரது வேலை பறிபோகக் கூடாது என்பதுதான் சமூக நீதியாகும். இத்தனை ஆண்டு திராவிட இயக்கத்தின் ஆட்சியில் அவரது வேலை பறி போய்விடும் என்ற நடை முறை ஏற்படுத்தப்பட்டு விட்டது.
இது பற்றி மாநில அரசுகளைப் பல வகையிலும் நாம் தொடர்பு கொண்ட போது சட்டம் அப்படித்தான் உள்ளது என்ற பதிலையே அதிகாரிகள் கூறுகின்றனர்.
முஸ்லிமாக மாறியவுடன் அவர் தாழ்த்தப்பட்டவராக மாட்டார் என்பது தார்மீக ரீதியில் இஸ்லாத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்ற போதும் அந்த மனிதர் வேலை இழப்பதால் அவர் பாதிக்கப்படத்தான் செய்வார்.
ஆனால் பெயர் மாற்றம் என்பது வேறு. மத மாற்றம் என்பது வேறு. முஸ்லிமாக மாறமலேயே ஒருவர் தனது பெயரை மாற்றம் செய்யலாம். மதம் மாறியும் பெயர் மாற்றம் செய்யலாம். எனவே பெயர் மாற்றம் செய்யும் போது இஸ்லாத்துக்கு மாறிவிட்டேன் எனக் குறிப்பிடாமலே எனக்கு இந்தப் பெயர் பிடித்துள்ளதால் பெயரை மாற்றிக் கொண்டேன் என்ற பெயர் மாறிக் கொண்டால் அவரது வேலைக்கு பாதிப்பு வராது. அல்லாஹ்விடம் அவர் முஸ்லிம் என்றாலும் நாட்டில் சட்டப்படி அவர் தாழ்த்தப்பட்டவர் தான். தாழ்த்தப்பட்டவர் என்ற அடிப்படையில் அவர் பெற்ற வேலை போகாது.
உணர்வு 15:45
In : Q&A