தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு மாத சம்பளம் உண்டா? (உதாரணமாக தலைவர், பொருளாளர் முதலியோருக்கு. ஆலிம் தவிர)
எச். முஹம்மது ரியாத் தொண்டி
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தலைவருக்கும் பொருளாளருக்கும் எந்த சமபளமும் கிடையாது. ஊக்கத் தொகையும் கிடையாது. இப்போது மட்டும் அல்ல. இந்த ஜமாஅத் துவக்கப்பட்ட காலம் முதல் இது தான் நடைமுறையாக உள்ளது.
மாநில நிர்வாகியாக இருப்பவர்கள் அலுவலகத்தில் முழு நேரமும் அலுவலகப் பணியைச் செய்ய முன்வந்தால் அவர்கள் செய்யும் ஊழியத்துக்காக ஊழியர் என்ற முறையில் ஊதியம் அளிக்கப்படும். தலைவராகிய நானோ பொருளாளராகிய அன்வர் பாஷா அவர்களோ முழு நேரமும் அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்றுவதில்லை என்பதால் எங்களுக்கு ஊதியமோ ஊக்கத் தொகையோ பெறுவது இல்லை.
உணர்வு 15:52