பதில்: காதல், காமலீலைகள், விபச்சாரம் போன்ற தகாத செயல்களில் ஈடுபடும் ஆண்-பெண் இருபாலரையும் பிடித்து இறுதிகட்டமாக கடுமையான முறையில் பிரம்புகளை கொண்டு அடிக்கிறார்கள். இதில் அதிகமாக ஆண்களை விட பெண்களைத்தான் அடிக்கிறார்கள். இச்சம்பவம் சமீபத்தில் மயிலாடுதுறையில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இத்தகைய தகாத செயல்களில் ஈடுபடும் பெண்களை பிடித்து கடுமையாக அடிப்பது - துன்புறுத்துவதை இஸ்லாம் அனுமதி அளிக்கிறதா? இந்திய சட்டம் இதற்கு சொல்லும் பதில் என்ன?

எம். ஜெகபர் சாதிக், மயிலாடுதுறை.

பதில் : இது உணர்ச்சிகரமாக மட்டும் அணுகும் பிரச்சனை அல்ல. அறிவுப் பூர்வமாகவும் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணவன்மார்கள் நீண்ட காலம் பிரிந்திருத்தல்
, தேவைக்கு அதிகமாக பணம் அனுப்புதல், கணவன் வெளிநாடு சென்ற உடன் மனைவியை அவளது தாய் வீட்டில் குடியிருக்கச் செய்தல், 
மனைவியின் நடத்தை குறித்த செய்திகள் அறிந்த பின்னரும் ரோஷம் அற்றவர்களாக ஆண்கள் இருத்தல் போன்ற பல காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளன.

இவற்றைச் சரி செய்யாமல் நாம் எடுக்கும் நடவடிக்கைகளால் எதிர்பார்த்த பலன் ஏற்படாது. மேலும் இவர்களால் சமுதாயத்துக்குக் கேவலம் ஏற்படுவதால் கோபம் வருவது இயற்கையானது தான். ஆனால் நாமே சட்டத்தைக் கையில் எடுக்காமல் சட்டத்தின் காவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வைக்க எத்தனையோ தந்திரங்களைக் கையாளலாம். சமுதாயமே திரண்டு நின்று நடவடிக்கைக்கு வற்புறுத்தினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைக்க முடியும். இதை விடுத்து நாமே சட்டத்தைக் கையில் எடுத்தால் அவர்களுக்குச் சாதகமாகவும் நமக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யும் நிலை ஏற்படும்.

அவர்கள் ஒரு நாள் அவமானத்துடன் தப்பித்து விடுவார்கள். தட்டிக் கேட்பவர்கள் சிறையில் காலம் தள்ளும் நிலைமை கூட ஏற்படும்
,
எனவே கொஞ்சம் விவேகமாக நடப்பதன் மூலம் தான் இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்க முடியும் என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடு.
உணர்வு 15:52