நபி வழிப்படியும் அல்லாஹ்வின் கட்டளைப்படியும் ‘நன்மையை ஏவி, தீமையை தடுக்கும்’ ஜமாஅத் ஆன ‘தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ நாட்டில் நடக்கும் அனைத்துத் தீமைகளுக்கும் எதிராக சரியில்லாத சட்டத்திற்கும் எதிராக களம் இறங்கிப் போராடுவது இல்லையே ஏன்? என்ன காரணம்?
முகம்மது அபுபக்கர் சித்தீக், கர்நாடகா

பதில் : நாட்டில் நடக்கும் தீமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தால் நாம் அதைக் கண்டித்து போராட்டம் நடத்தலாம். ஆனால் தினமும் நூற்றுக் கணக்கான தீமைகள் நடக்கின்றன. பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் தீமைகள் என்று எடுத்துக் கொண்டால் கூட குறைந்தது தினசரி ஒரு தீமையாவது நடக்காமல் இல்லை. அப்படியானால் தினமும் ஒரு போராட்டம் நாம் நடத்த வேண்டும். பொருளாதார அடிப்படையிலும் இது சாத்தியமாகாது. மக்களின் ஆதரவைப் பெறுவதும் சாத்தியமில்லாமல் போய் விடும். ஒரு சிறிய போராட்டம் நடத்துவது என்றால் கூட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டும். தினம் ஒரு போராட்டத்துக்கு அழைத்தால் மக்களும் வர மாட்டார்கள். எனவே தான் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு நமது சக்திக்கு ஏற்ப திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போராட்டங்களை மட்டும் நடத்துகிறோம்.
உணர்வு 15:51