நமது தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமை மற்றும் மாவட்ட கிளைகள் அனைத்தும் தற்போது கடனில் மூழ்கி உள்ளன என்ற செய்திகள் வருகின்றன. அது எதனால்? அவைகள் நடத்தும் பல செயல்பாடுகளினால்தான் எனத் தெரிகிறது. (உதாரணமாக ஒரு பொதுக்கூட்டத்திற்கு குறைந்தது ரூ. 30,000 ஆகலாம்.) அதனால் ஓரிரு வருடங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதன் மூலம் செயல்பாடுகளின் செலவுத் தொகையை தலைமைக்கும் கொடுத்து தனது கடன்களையும் தீர்த்துக் கொள்ளலாம் அல்வவா?
ஏ. ஷர்புன்னிசா, கிள்ளை.
பதில் : சூப்பரான ஐடியா கொடுத்துள்ளீர்கள். எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டால் பணம் கிடைக்கும்தான். பணிகள் இல்லாத ஜமாஅத் எதற்கு என்ற கேள்விக்கு என்ன சொல்வது? பண நெருக்கடியில் உள்ளவனிடம் நீ சாப்பிடாமல் இருந்தால் பணம் மிச்சமாகுமே என்று கூறினால் அது எப்படி இருக்குமோ அப்படி உங்கள் யோசனை உள்ளது. செயல்பாடு இல்லாத இயக்கம் செத்த பிணத்திற்கு சமமானது என்பதாலும் நாம் இயக்கம் நடத்துவதே பணியாற்றத்தான் என்பதாலும் அதை எக்காரணம் கொண்டும் நிறுத்த முடியாது. மேலும் உங்கள் யோசனையைக் கேட்டால் கடன் அடையாது. கடன் அதிகரிக்கத்தான் செய்யும். நாம் பணி செய்யவில்லை என்ற உடன் தந்து வந்த உதவிகளை சகோதரர்கள் நிறுத்திக் கொள்வார்கள். நாம் மேலும் கடனாளியாகி விடுவோம்.
உணர்வு 15:51
Posted by Mohamed Hamad. Posted In : Q&A